இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்தை நியாயப்படுத்துகிறதா தி.மு.க ?
இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்தை நியாயப்படுத்துகிறதா தி.மு.க ?
ரிபப்ளிக் டிவியில் அர்னாப் கோஸ்வாமி நெறியாளராக இருந்து நடத்திய விவாதத்தில் திமுக பிரதிநிதியாக சரவணன் பங்கேற்றார். அரசியல்சாசனத்தின் பிரிவு 370-வது பிரிவு நீக்கப்பட்டது குறித்து திமுகவின் எதிர்ப்பை தெரிவித்த சரவணன், ”காஷ்மீர் மீது இந்தியாவுக்கு எந்தஉரிமையும் கிடையாது; ஏனென்றால், அது என்றைக்குமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது இல்லை” என்றார்.
இதை கேட்டதும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கட்சி பாகுபாடு இன்றி கண்டித்தனர்.
அர்னாபும் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தி, “சரவணன், நீங்கள் சொல்வதுதான் திமுகவின் அதிகாரபூர்வ நிலை என்று கட்சி தலைவர் ஸ்டாலின்அறிவிப்பாரா? காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றால், அது இந்தியஇறையாண்மைக்கு எதிரானதாகும். அதன் விளைவாக திமுக இந்தியாவில் எங்கும் செயல்பட முடியாது.” என்று குறிப்பிட்டார்.
அர்னாப் கேள்விக்கு பதில் சொல்லாமல், சரவணன் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளிநடப்பு செய்தார்.
திமுகவின் அதிகார செய்தி தொடர்பாளர் சரவணன் இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்து நாட்கள் பல கடந்தும் இதுவரை இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாய் திறக்கவே இல்லை. அதற்கு மறுப்பு தெரிவிக்கவும் ஸ்டாலின் முன்வரவில்லை.