மிசாவில் ஸ்டாலின் கைதானாரா ? தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.!

மிசாவில் ஸ்டாலின் கைதானாரா ? தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.!

Update: 2019-10-16 12:45 GMT

மிசா என அழைக்கப்படும் உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் என்பது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் 1973 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் தவறாக பயன்படுத்தி இந்திரா காந்தி பல அரசியல் தலைவர்களை இந்தியா முழுவதும் கைது செய்தார். இதில் திமுக தலைவர் ஸ்டாலினும் அன்றைய காலத்தில் இந்த திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்று திமுகவினர் கூறி வந்தனர்.




https://twitter.com/BJP4TamilNadu/status/1184440137763057665


திமுக திருக்கோயிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி திமுகவின் ஒரு மூத்த தலைவர். அவரை வின் தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் மதன் நேர்காணல் எடுத்தார். அந்த நேர்காணலில் மிசா சட்டத்தின் கீழ் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பல துன்பங்களை அனுபவித்தார் என்று பொன்முடி கூறுகையில், பத்திரிகையாளர் மதன் எமெர்ஜெண்சி சமயத்தில் நடந்த அராஜகங்கள் பற்றி விசாரணை செய்த நீதிபதி ஷா வின் அறிக்கையில் மிசா சட்டத்தால் அனைத்து மாநிலங்கிலும் கைது செய்யப்பட்டவர்களின் அனைத்து பெயர்களும் இந்த அறிக்கையில் இருக்கிறது என்றும், ஆனால் அதில் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பெயர் இல்லை என்றும் பத்திரிகையாளர் மதன் ஆதாரத்துடன் கூறினார். இதற்க்கு பொன்முடி பதில் சொல்ல தெரியாமல் அவருக்கு தெரியாது என்று கூறி தப்பித்தார்.


ஆதாரத்துடன் தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்பதற்கு தி.மு.க விடம் பதில் இல்லாததால் தி.மு.க பல வருடங்களாக கூறிய பொய் தரைமட்டமானது.


Similar News