பா.ஜ.க பிரமுகரை கடுமையாக தாக்கிய தி.மு.க-வினர் : உறுப்பினர் சேர்க்கையை சகித்துக்கொள்ள முடியாமல் வெறியாட்டம்
பா.ஜ.க பிரமுகரை கடுமையாக தாக்கிய தி.மு.க-வினர் : உறுப்பினர் சேர்க்கையை சகித்துக்கொள்ள முடியாமல் வெறியாட்டம்
மத்தியி்ல் ஆளும் பா.ஜ.க, நாடு முழுவதும் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை நடத்தி வருகிறது. உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். அனைத்து மாநிலங்களிலும் உறுப்பினர் சேர்க்கை பெரும் அளவில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சேலத்தை சேர்ந்த மூத்த பா.ஜ.க உறுப்பினாரான சௌந்தரராஜன் என்பவர், உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தி.மு.க-வினர் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டு கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, காவல்துறை இது தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.