மாவோயிஸ்ட் முக்கிய தலைவனுடன் தொடர்பு: தி.மு.க பிரமுகர் கைது!! பயங்கரவாதிகளின் தோழனா தி.மு.க?
மாவோயிஸ்ட் முக்கிய தலைவனுடன் தொடர்பு: தி.மு.க பிரமுகர் கைது!! பயங்கரவாதிகளின் தோழனா தி.மு.க?
கடந்த மாதம் 28-ஆம் தேதி கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் மணிவாசகம், கார்த்தி, அரவிந்த் மற்றும் ரமா என்ற அஜிதா ஆகிய 4 மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
மணிவாசகம், கேரள மாநில மாவோயிஸ்ட் பயங்கரவாத இயங்க தலைவனாக செயல்பட்டு வந்தவன்.
இவன் சேலம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவன். இவன் தனது 20 வயதில் இருந்தே நாட்டுக்கு எதிரான நாசவேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளான். அப்பாவி மக்களை மூளை சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றுவதில் கைதேர்ந்தவன். இவன் மீது குண்டு வைத்தது உள்பட 4 வழக்குகள் தமிழகத்தில் உள்ளன.
கேரள மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் தலைவன் குப்பு தேவராஜ் சுட்டுகொல்லப்பட்ட பிறகு, கேரள மாநில மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளின் தலைவன் ஆனான் மணிவாசகம். இவனால் கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு , மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் மத்திய அரசு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு போன்ற மாவட்டங்களை இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து கேரளாவில் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை நரேந்திர மோடி அரசு முடுக்கி விட்டது. இதனால் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளுக்கு கூஜா தூக்கிவந்த கேரள கம்யூனிஸ்ட் அரசு. வேறு வழியில்லாமல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன்பின்னர்தான், கடந்த மாதம் 28-ஆம் தேதி மணிவாசகம் உள்பட 4 மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளும் கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சுட்டுகொல்லப்பட்ட மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் தலைவன் மணிவாசகத்தின் உடலை அவனின் சொந்த ஊரான சேலம் ராமமூர்த்தி நகரில் அடக்கம் செய்யக்கூடாது என்று அந்த ஊர் மக்கள், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுகொடுத்தனர். அவனால் 40 ஆண்டுகளாக நிம்மதியை இழந்துள்ளோம் என்று அவர்கள் கொதித்து எழுந்தனர்.