சிகரெட் வாங்கி கொடுக்காததால் இளைஞரை கொன்ற தி.மு.க பிரமுகர்! அராஜகத்தின் உச்சக்கட்டம் !

சிகரெட் வாங்கி கொடுக்காததால் இளைஞரை கொன்ற தி.மு.க பிரமுகர்! அராஜகத்தின் உச்சக்கட்டம் !

Update: 2019-10-02 04:34 GMT

சென்னை திருவள்ளூரில் சிகரெட் வாங்கி கொடுக்க மறுத்த இளைஞரை கொலை செய்துவிட்டு ஓடிய திமுக சேர்ந்த பொன்ராஜை காவல் துறை தேடி வருகின்றனா்.


இவர் திருவள்ளூர் சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரனின் நிழல் போல சுற்றி வந்தவர் எனவும் அந்த பகுதியில் தளபதி ராஜ் என அழைக்கப்படுவர் எனவும் கூறப்படுகிறது , தி.மு.க பிரமுகர் பொன்ராஜ் செய்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.


சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் மேட்டுத் தெருவில் வசிப்பவர் சங்கர். அவரது மகன் சாமுவேல். சாமுவேல் இரு நாட்களுக்கு முன் தன் நண்பர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்த போது அங்கு நின்றிருந்த காரில் தி.மு.க பிரமுகர் பொன்ராஜ் மது அருந்தி கொண்டிருந்துள்ளார்.


அந்த வழியே சென்ற சாமுவேலிடம் சிகெரெட் வாங்கி வர சொல்லியுள்ளார் பொன்ராஜ் அதற்கு சாமுவேல் மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த பொன்ராஜ் தனது காரில் வைத்திருந்த கத்தியை எடுத்து சாமுவேல் மார்பு பகுதியில் குத்தி விட்டு அந்த இடத்தை விட்டு தப்பியோடிவிட்டார்.


அந்த இடத்தில் சரிந்த சாமுவேல் இரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். அவருடன் சென்ற நண்பர்கள் சாமுவேலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே இறந்துவிட்டதாக அரசு மருத்துவர்கள் கூறியதால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


தி.மு.க பிரமுகர் பொன்ராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.







இவ்வாறு NEWS J செய்தி கூறுகிறது.


Similar News