வீடு அபகரிப்பு தி.மு.க! வாடகைக்கு வந்த வீட்டை ஆட்டையை போட முயன்ற தி.மு.க நிர்வாகி!!

வீடு அபகரிப்பு தி.மு.க! வாடகைக்கு வந்த வீட்டை ஆட்டையை போட முயன்ற தி.மு.க நிர்வாகி!!

Update: 2019-09-11 12:53 GMT


பிரியாணி கடைகளில் திருட்டு, பஜ்ஜி கடையில் திருட்டு, விபத்தில் இறந்த பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடியது, பியூட்டி பார்லரில் புகுந்து ரவுடித்தனம் செய்தது, துணிக்கடையில் புகுந்து துணி எடுத்துவிட்டு பணம் கொடுக்காமல் கடையை உடைத்தது, போதைப்பொருள் கடத்தல், மணல் கொள்ளை இதெல்லாம் தி.மு.கவின் கடந்த கால சாதனைகள்.


தமிழகத்திற்கு ஊழலை அறிமுகப் படுத்திய தி.மு.க, செய்யாத முறைகேடுகளும் இல்லை, கொள்ளைகளும் இல்லை, நில அபகரிப்புகளும் இல்லை.


இந்த வரிசையில் தி.மு.கவின் லேட்டஸ்ட் சாதனையாக இணைந்திருப்பது, வாடகைக்கு வந்த வீட்டை ஆட்டையை போட முயன்றது.


தி.மு.கவின் இந்த சாதனைக்கு சொந்தக்காரர், திருப்பூர் மாணவரணி அமைப்பாளர் கோபிநாத்.


திருப்பூர் ராயபுரத்தில் உள்ள சூசையாபுரம் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் திசில்லா. இவருக்கு சொந்தமான வீட்டில் திருப்பூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.


கடந்த ஆண்டு திசில்லாவின் கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்ட நிலையில், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த கோபிநாத்திடம் வீட்டின் பத்திரத்தையும், கையொழுத்திட்ட பூர்த்தி செய்யப்படாத பண்டு பத்திரம் மற்றும் நிரப்பப்படாத செக் லீப் ஆகியவற்றை கொடுத்து 8 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.


கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திசில்லா தான் வாங்கிய ரூ.8 பணத்தை கோபிநாத்திடம் திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் திசில்லாவின் வீட்டு பத்திரத்தை மட்டும் கோபிநாத் திருப்பி கொடுத்துள்ளார். கையொப்பமிட்ட நிரப்பபடாத பாண்ட் பத்திரம் மற்றும் நிரப்பப்படாத கையெழுத்திட்ட செக் லீப் ஆகியவற்றை திருப்பி கொடுக்கவில்லை.


இதனால் கையொப்பமிட்ட நிரப்பபடாத பாண்ட் பத்திரம் மற்றும் நிரப்பப்படாத கையெழுத்திட்ட செக் லீப் ஆகியவற்றை திசில்லா கேட்டுள்ளார். அவற்றை திருப்பி கொடுக்க மறுத்ததோடு அவருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். தகாத வார்த்தைகளாலும் திசில்லாவை திட்டியுள்ளார்.


அதோடு முறைகேடாக வீட்டை அபகரிக்கும் நோக்கத்துடன் கோபிநாத் செயல்படுவதை உணர்ந்த திசில்லா, அவரை வீட்டை காலி செய்யும்படி சொல்லியுள்ளார்.


ஆனால் வீட்டை காலி செய்யாதது மட்டுமல்லாமல், திசில்லாவை தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளார்.


இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திசில்லாவும், அவரது கணவரும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதனை விசாரிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சித்தலைவர்.


இதனைத்தொடர்ந்து கோபிநாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது குறித்து திசில்லா கூறும் போது, “தி.மு.க. பிரமுகர் கோபிநாத், சொத்தை எனக்கு எழுதி கொடு, அல்லது நீ என்னுடன் வாழ்வதற்கு வா, உன் கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு வந்துவிடு என்று கூறி என்னை ரொம்ப டார்ச்சர் செய்கிறார். ஒரு லிமிட்டே இல்லாமல் போகிறது. செக்சுவல் ஹராஸ்மன்ட் செய்கிறார். என் கணவர் வீட்டில் இல்லாதபோது வீடு புகுந்து என்னை அடிக்கிறார், திட்டுகிறார். கடைசி முயற்சியாக கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளோம். இதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலைதான் செய்ய வேண்டும். இதற்கு மேல் என்னால் தாங்கவே முடியாது” என்றார்.


அதோடு, “என் சாவுக்கு காரணம் கோபிநாத்தான்” என்று தனது மொபைலில் பதிவு செய்தும் வைத்துள்ளார்.




https://www.youtube.com/watch?v=FUaHWlrsz0g



வாடகைக்கு வந்த தி.மு.க மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபிநாத், அந்த வீட்டை அபகரிக்க முயன்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Similar News