தி.மு.க பொதுக்குழுவிற்கு ஆட்டோவில் வந்து, பணம் கொடுக்காமல் தப்பியோடிய உடன்பிறப்புகள்! புலம்பி தள்ளும் ஆட்டோ டிரைவர்! #ஓசிஆட்டோதிமுக ?
தி.மு.க பொதுக்குழுவிற்கு ஆட்டோவில் வந்து, பணம் கொடுக்காமல் தப்பியோடிய உடன்பிறப்புகள்! புலம்பி தள்ளும் ஆட்டோ டிரைவர்! #ஓசிஆட்டோதிமுக ?
தி.மு.க கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டை YMCAயில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கூட்டத்திற்கு ஆட்டோவில் வந்த மூன்று தி.மு.க உடன்பிறப்புகள் பணம் தரமல் சென்று விட்டனர். "பசிக்குது சாப்பாடிற்கு காசு இல்லை" என ஆட்டோ டிரைவர் குட்டி புலம்பும் காட்சி கல் நெஞ்சத்தையும் கரைக்கும் விதம் உள்ளது.
அந்த வீடியோ பதிவை அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் கோவை சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பஜ்ஜி கடை, பரோட்டா கடை, பிரியாணி கடை, டீக்கடை என தொடர்ந்து வந்த தி.மு.க-வினரின் அட்டூழியம் தற்போது ஆட்டோ டிரைவர்களையும் விட்டு வைக்காதது தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் #ஓசிஆட்டோதிமுக என ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஆட்டோ டிரைவரிடம் மு.க.ஸ்டாலின் சென்று மண்டியிட்டு மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.