சிறுமிகள் கற்பழிப்புக்கு தூக்குதண்டனை வேண்டாம் என்று தி.மு.க.கதறியது இதற்காகத்தானா? என சமூக ஊடகங்களில் கேள்வி ?

சிறுமிகள் கற்பழிப்புக்கு தூக்குதண்டனை வேண்டாம் என்று தி.மு.க.கதறியது இதற்காகத்தானா? என சமூக ஊடகங்களில் கேள்வி ?

Update: 2019-09-04 08:15 GMT


பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை, தி.மு.க எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜ்குமார் (வயது 52). இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கேரள மாநிலம், இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 15 வயது மகளை வீட்டுக்கு வேலைக்காக சேர்த்துக்கொண்டார்.


ஒரு சில நாட்களில் தனது தாயாரை போனில் தொடர்பு கொண்ட அந்த சிறுமி, தன்னால் இங்கு இருக்க முடியவில்லை என்றும், உடனே அழைத்து செல்லும்படியும் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து மகளை அழைத்து செல்வதற்காக சிறுமியின் பெற்றோர் கேரளாவில் இருந்து புறப்பட்டு பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்தபோது, ராஜ்குமாரின் நண்பர் ஜெய்சங்கர் சிறுமியின் தாயாரை போனில் தொடர்பு கொண்டு சிறுமி உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே பெரம்பலூர் வந்த சிறுமியின் தாயார், ஆஸ்பத்திரியில் மகளை பார்த்தபோது சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்துபோனார். சிறுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


பிரேத பரிசோதனையில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், அரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேர் மீது ஆள்கடத்தல், கற்பழிப்பு, மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.


இதுதொடர்பான வழக்கு, பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது பன்னீர்செல்வம் இறந்து போனார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ராஜ்குமார் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.


இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ. சாந்தி,குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கு பாலியல் வன்கொடுமை, மரணம் நிகழும் என தெரிந்தே குற்றம் செய்தல், கூட்டு சதி ஆகிய பிரிவின் கீழ் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் 30,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், இன்னொரு குற்றவாளியான ஜெய்சங்கருக்கு கூட்டு சதி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும் 12,000 ரூபாய் அபராதமும் விதித்து தீப்பாளித்தார்.


மற்றவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.


https://www.newsj.tv/view/DMK-MLA-got-punished-for-10-years-of-imprisonment-8509


இந்த சம்பவம் தி.மு.க ஆட்சியில் இல்லாத 2012-ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது தி.மு.க ஆட்சி நடந்து இருந்திருந்தால், சிறுமிக்க நீதி கிடைத்து இருக்குமா என்பதே கேள்விக்குறி ஆகியிருக்கும்.


அதேபோல, இப்போதும் தி.மு.க ஆட்சியில் இல்லாத போது மற்றொரு தி.மு.க பிரமுகரின் காம கொடூரம் அம்பலத்துக்கு வந்துள்ளது.


திருச்சி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை திமுக பிரமுகர் உட்பட நான்கு பேர் கடந்த 7 மாதங்களாகப் பாலியல் பலாத்காரம் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


புலிவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் அந்த சிறுமியின் பெற்றோர், படிப்பறிவு இல்லாதவர்கள் கூலி வேலை செய்து வருபவர்கள். பெற்றோர் வேலைக்கு செல்லும் போது தாத்தாவின் கண்காணிப்பில் சிறுமி இருந்துள்ளார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பமாக இருந்தது தாய்க்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் அருகில் இருக்கும் ஆராம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர் திருச்சி அரசு மருத்துவமணையில் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 6 மாதம் கர்ப்பம் என உறுதி செய்துள்ளனர்.


இதை அடுத்து காவல்துறைக்கும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தரப்பிலும் சிறுமியின் சித்தப்பா தரப்பிலும் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது .


சிறுமியிடம் விசாரித்த காவல் துறை அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. 


திருச்சி கீழ சிந்தாமணியை சேர்ந்த பால்காரன் முத்து (வயது 57), பேரமங்கலத்தில் டீ கடை நடத்தி வரும் செல்வராஜ் (வயது 51), பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ராமராஜ் (வயது 45) மற்றும் பேரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இரண்டு முறை பொறுப்பு வகித்த தி.மு.க-வை சேர்ந்த செல்வராஜ் (வயது 49) ஆகிய 4 பேரும் சிறுமியை சீரழித்துள்ளனர்.


நான்கு பேரும் கடந்த 7 மாதங்களாக சிறுமியை சீரழித்து வந்துள்ளனர். இதனால், சிறுமி 6 மாதம் கர்பமாகி உள்ளார். இவர்களில் பேரமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் என்பவர் தற்போது தி.மு.க ஊராட்சி மன்ற பகுதி பொறுப்பாளராகவும் தி.மு.க மாவட்ட விவசாய அணியிலும் பொறுப்பில் உள்ளார். 


நான்கு பேர் மீதும் போஸ்கோ (POSCO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



https://kathirnews.com/2019/09/03/14-year-old-mentally-ill-girl-raped-dmk-ex-panchayath-leader/


தி.மு.க. ஆட்சியில் இல்லாதபோதே இவர்களின் அடாவடிகளுக்கு எல்லையே இல்லை. ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான். இது ஒருபுறதம் இருக்க, தி.மு.க ஆட்சியில் குற்றவாளி உடன்பிறப்புகள் சட்டம் தன் கடமையயை செய்வதுமில்லை. அதன் கைகள் கட்டப்பட்டு விடுகின்றன.


சிறுமிகள் கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை வேண்டாம் என்று தி.மு.க வரிந்து கட்டிக்கொண்டு எதித்தது. கனிமொழி இந்த சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பை பாராளுமன்றத்தில் பதிவு செய்யும்போது, உச்சத்துக்கே சென்றுவிட்டார்.


சிறுமிகள் கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை வேண்டாம் என்று திமுகவினர்  குதித்தது, உடன் பிறப்புகள் பலர் தூக்கு மேடைக்கு  செல்வார்கள் என்பது அவர்களுக்கு முன்பே தெரிந்துள்ளது போலும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.




https://twitter.com/News18TamilNadu/status/1168773265705164800


இது தொடர்பாக நெட்டிசன்கள் தங்களின் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்




https://twitter.com/arvinth_e/status/1169088645237739520


எல்லாவற்றிற்கும் மேலாக, பொள்ளாச்சி சம்பவத்திற்கு விண்ணதிர குரல் கொடுத்த கனிமொழி, ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், நக்கீரன் கோபால், காம்யூனிஸ்டுகள், மாதர் சங்க கண்ணகிகள் இவர்களில் ஒருவர் கூட இந்த மனவளர்ச்சி குறைந்த குழந்தைக்கு குரல் கொடுக்க முன்வரவில்லை என்பது கொடுமையான வேதனை.


Similar News