தமிழை வைத்து குடும்பத்தை வளர்க்கும் ஒரே கட்சி தி.மு.க - தி.மு.க வை கிழித்த பிரேமலதா விஜயகாந்த் !

தமிழை வைத்து குடும்பத்தை வளர்க்கும் ஒரே கட்சி தி.மு.க - தி.மு.க வை கிழித்த பிரேமலதா விஜயகாந்த் !

Update: 2019-09-30 09:48 GMT

தே.மு.தி.க கட்சியின் சார்பில் முப்பெரும்விழா பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


இதனை தொடர்ந்து பொது கூட்டத்தில் உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த் தி.மு.கவை ஒரு கைபார்த்துவிட்டார். தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்து வரும் ஒரே கட்சி தி.மு.க தான். தமிழை வைத்து கட்சியை மட்டுமில்லாமல் குடும்பத்தையும் சேர்த்தே வளர்த்து வருகின்றனர். மக்கள் சரியான நேரத்தில் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்.


மாணவர்கள் இளைஞர்கள் அனைத்து மொழிகளையும்கற்று கொள்ள வேண்டும். கற்று கொண்டால் தான் வேலைவாய்ப்புகள் விரைவில் எண்டு வேண்டுமானாலும் வேலைக்கு செல்லலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய பல மொழிகளை கற்று கொள்வது அவசியம்.


வருகின்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.கவின் வெற்றிக்கு தே.மு.தி.க உழைக்கும் என்றார்.


Similar News