தி.மு.க தொடர்ந்த அவதூறு வழக்கில் தண்டனை கிடைக்கும் என்பதால் வைகோ மருத்துவமனையில் தஞ்சம்! தீர்ப்பு ஒத்தி வைப்பு!!
தி.மு.க தொடர்ந்த அவதூறு வழக்கில் தண்டனை கிடைக்கும் என்பதால் வைகோ மருத்துவமனையில் தஞ்சம்! தீர்ப்பு ஒத்தி வைப்பு!!
2006-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதினார். அதை தொடர்ந்து அப்போதைய முதல்வர் சார்பில் வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வைகோ ஆஜராகவில்லை. அப்போது அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், “வைகோ உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே இன்று ஆஜராக வில்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.
பின்னர் நீதிபதி, “தீர்ப்பின்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள வைகோ கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்பதால் தீர்ப்பு இன்று வழங்கவில்லை” என்று அறிவித்தார்.
இந்த வழக்கில் வைகோவிற்கு தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால்தான் அவர் கடந்த சில நாட்களாக மருத்துவ மனையில் அடைகலம் புகுந்துள்ளார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.