வரும் தேர்தலில் 3-வது பெரிய கட்சியானா தி.மு.க, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் போட்டியிடும்! தி.மு.க வை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
வரும் தேர்தலில் 3-வது பெரிய கட்சியானா தி.மு.க, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் போட்டியிடும்! தி.மு.க வை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
நாடு முழுவதும் கடந்த 15-ஆம் தேதி, 73-வது சுதந்திரதின விழா, வெகு
சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய
கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
சென்னை கோட்டை
கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேசியக்கொடி ஏற்றி
வைத்து உரை நிகழ்த்தினார்.
இதேபோல பெரும்பாலான
அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கட்சி அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து
சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். ஆர்.எஸ் பாரதியை கொடியேற்ற சொல்லிவிட்டு தி.மு.க
தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றாமல் புறக்கணித்தார்.
அதேபோல அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி
தொடர்பாளர் ரிபப்ளிக் டிவியில் நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, “காஷ்மீர்
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒருபோதும் இருந்ததில்லை” என்று
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார்.
காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கு எதிராக
பாகிஸ்தான் குரல்கொடுத்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளும்
இந்தியாவுக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து
மோடி அரசுக்கு துணை நிற்கும்போது, தி.மு.க, காங்கிரசின்
ஒரு பிரிவு உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
இந்தியாவிற்கு எதிரான தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
போராட்டம் அறிவித்து உள்ளார். நாளை மறுநாள் (22-ஆம்தேதி) டெல்லியில்
இந்த போராட்டம் நடக்கிறது என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ள
தி.மு.கவையும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் பாகிஸ்தான் தலையில் தூக்கி
வைத்து கொண்டாடுகிறது.
பாகிஸ்தானின் அரசு அதிகாரப்பூர்வமாஇணையதளமான http://www.radio.gov.pk என்ற இணையதளத்தில் இந்தியாவுக்கு எதிரான தி.மு.கவின் போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி ஆகிய தி்.மு.கவின் முன்னணி தலைவர்கள் அடங்கிய படத்தையும் வெளியிட்டு, பாகிஸ்தான் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.