விக்கிரவாண்டியில் வீழும் தி.மு.க ! பா.ம.க ஆதரவால் காலூன்றும் அ.தி.மு.க .!

விக்கிரவாண்டியில் வீழும் தி.மு.க ! பா.ம.க ஆதரவால் காலூன்றும் அ.தி.மு.க .!

Update: 2019-10-03 08:39 GMT

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 21-ஆம் தேதி விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுளள்து . 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதற்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது.


இந்நிலையில் கடந்த முறை விக்கிரவாண்டி தொகுதியை திமுக வசம் இருந்தது அங்கு எம்.எல்.ஏ ஆகா இருந்தவர் ராதாமணி இவர் மறைந்ததையொட்டி அங்கு தற்போது இடைத்தேர்தல் வந்துள்ளது. கடந்த முறை திமுக வென்றதற்கு காரணம் அதிமுக,பாமக, பாஜக தேமுதிக போன்ற கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. திமுக 63,757 வாக்குகளை அ.தி.மு.க 56,845 பெற்றது 7000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. பா.ம.க மட்டும் பெற்ற வாக்குகள் 41,000 இது அதிமுகவிற்கு பெரும் இடியாக அமைந்தது அப்போதைய தேர்தல்.


ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது அ.தி.மு.க வுடன் பா.ம.க கூட்டணியில் உள்ளது. தேமுதிகவும் சில இடங்களில் கணிசமான வாக்கு வங்கியை பெற்றுள்ளது. ஆளும் அரசின் மீது குறைகள் இருந்தாலும் நாடாளுமன்ற தோல்வி எதிரொலித்தாலும் அங்கு பா.ம.க இன்றளவும் பலமாக உள்ளது. இந்த தொகுதி இந்த முறை அ.தி.மு.க விற்கு சாதகமாக அமையும் என கூறுகிறார்கள் அரசியல் வட்டாரங்கள்.


தி.மு.க வுடன் விடுதலை சிறுத்தைகள் இருப்பது இந்த இடைத்தேர்தலில் தி.மு.க விற்கு பாதகம் என்ற சொல்கிறார்கள்


விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் புகழேந்தியும் அ.தி.மு க சார்பில் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வனும் நேரடியாக போட்டியிடுகின்றனர். சீமான் சார்பில் கந்தசாமி போட்டியிடுகிறார்.


அ.தி.மு.க வுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளான பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர். தி.மு.க வுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு,க,வி.சி.க சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


இந்த முறை தேர்தலானது அ.தி.மு.க தி.மு.க நேரடியாக களம் காண்கிறது. அ.தி.மு.க வுக்கு பாமக ஆதரவு இருப்பதால் வெல்லும் வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம். அதேபோல் இந்த இடைத்தேர்தலில் திமுக மண்ணை கவ்வினால் ஸ்டாலினை நேரடியாக பாதிக்கும். தற்போது உதய நிதியை பிரச்சாரத்திற்கு வர வேண்டாம் என சீனியர்கள் கூறியுள்ளனர், இதனால் திமுகவினுள் பனிப்போர் ஆரம்பித்து விட்டது. அதிமுக வென்றால் அது ஆளும் அரசிற்கு ஒரு பூஸ்ட் தந்தது போல் இருக்கும் மக்கள் அதிமுக மேல் வைத்திருக்கும் நம்பிக்கை கூடும்.


கள நிலவரங்களும் இதே தான் கூறுகின்றது. தி.மு.க இந்த முறை மண்ணை கவ்வுமா என்பது வரும் 24 ஆம் தேதி தெரிந்து விடும்


Similar News