தி.மு.க எம்.எல்.ஏ அலுவலகங்களில் நிறுவப்படும் "வாரிசு" உதயநிதி ஸ்டாலின் படம், தூக்கியடிக்கப்பட்ட காந்தி, அம்பேத்கர் படங்கள்! கொத்தடிமைகளின் கூடாரமானதா தி.மு.க?

தி.மு.க எம்.எல்.ஏ அலுவலகங்களில் நிறுவப்படும் "வாரிசு" உதயநிதி ஸ்டாலின் படம், தூக்கியடிக்கப்பட்ட காந்தி, அம்பேத்கர் படங்கள்! கொத்தடிமைகளின் கூடாரமானதா தி.மு.க?

Update: 2019-10-22 02:34 GMT

அண்ணா பிறந்த நாளையொட்டி தி.மு.க இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கவிதை ஒப்புவித்தல், கட்டுரை போட்டிகள் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் நடந்தது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.


இறுதி போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.


சுபஸ்ரீ மரணத்திற்கு கண்டனம் தெரிவித்தார் மு.க ஸ்டாலின் "இனிமேல் தி.மு.க கட்சியின் கழக நிகழ்ச்சிகள் யாரும்  பேனர் வைக்க கூடாது, பேனர் வைத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" அவர் தெரிவித்தார். ஆனால் ஓசூருக்கு வருகை தந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு தி.மு.க-வினர் பேனர்கள் வைத்து வரவேற்பு அளித்தது அங்கு இருப்பவர்களை முகம் சுளிக்க வைத்தத்து.





அதே போல, ஓசூர் தி.மு.க எம்.எல்.ஏ சத்யா அலுவலகத்தில் தி.மு.க மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் படம் இடம் பெற்றுள்ளதும், காந்தி, அம்பேத்கர் ஆகியோரது படம் இல்லாமல் இருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, கருணாநிதி குடும்ப கொத்தடிமைகளின் கூடாரமாகிறதா தி.மு.க என்ற கேள்வியை எழுப்புகிறது.


Similar News