“வேலூரில் முஸ்லிம் - கிறிஸ்தவர்களின் வாக்குகளால்தான் தி.மு.க வெற்றி பெற்றது” - துரைமுருகன்! தி.மு.கவில் உள்ள இந்துக்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

“வேலூரில் முஸ்லிம் - கிறிஸ்தவர்களின் வாக்குகளால்தான் தி.மு.க வெற்றி பெற்றது” - துரைமுருகன்! தி.மு.கவில் உள்ள இந்துக்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

Update: 2019-08-10 08:49 GMT


வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. கூட்டணி சார்பில் கதிர் ஆனந்தும்  போட்டியிட்டனர்.
இதில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 485340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  ஏ.சி.சண்முகம்  477199 வாக்குகளை பெற்றுள்ளார். 


இந்த தொகுதியில் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர் என்றும், 1.5 லட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவ வாக்காளர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 


இந்த வாக்குகள் முழுமையாக தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்துக்குத்தான் கிடைக்கும் என்று தி.மு.கவினர் கூறி வந்தனர். தேர்தல் முடிவுக்கு பின்னரும் முஸ்லிம் - கிறிஸ்தவர்களின் வாக்குகள் முழுமையாக தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ளதாகவே கூறுகின்றனர்.


இது தொடர்பாக தி.மு.க பொருளாளரும், கதிர் ஆனந்தின் தந்தையுமான துரைமுருகன் கூறும்போது, “இஸ்லாமியர்களின் ஆதரவு எப்போதும் தி.மு.க.வுக்கு உண்டு. அது இந்த தேர்தல் மூலமும் நிரூபணமாகி உள்ளது. தி.மு.கவின் வெற்றிக்கு இஸ்லாமிய - கிறிஸ்தவ வாக்குகளே காரணம்” என்றார்.


அதாவது இந்துக்களின் வாக்களால் தி.மு.க வெற்றிபெற வில்லை என்பதைத்தான் துரைமுருகன் இப்படி சொல்கிறார்.


வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட வாணியம்பாடி, ஆம்பூரைத் தவிர மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்துக்களே பெருவாரியாக உள்ளனர். முஸ்லிம் - கிறிஸ்தவர்கள் மிக சொர்ப்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர். இதுவே கள நிலவரம்.


துரைமுருகனின் இந்த பேச்சு, தி.மு.கவில் உள்ள இந்துக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. ஒருபுறம் தி.மு.க தலைவர் ஸ்டாலின், இந்து மத வழிபாட்டு முறைகளையும், சம்பிரதாயங்களையும் கேலி செய்கிறார். மறுபுறம் தி.மு.கவின் மூத்த தலைவர்களே, தி.மு.வில் உள்ள இந்துக்களை அவமானப்படுத்துகின்றனர்.


வேலூர் பாராளுமன்ற தொகுதியில், இந்துக்களின் வாக்குகள் இல்லாமல் எப்படி தி.மு.க வெற்றி பெற்றிருக்க முடியும்? இந்துக்கள், தி.மு.கவிற்கு வாக்களிக்க வில்லை என்பது போலவும், முஸ்லிம் - கிறிஸ்தவர்களின் வாக்குகளாலதான் தி.மு.க வெற்றி பெற்றது  போலவும் துரைமுருகன் மத கண்ணோட்டத்தில் பேசியிருப்பதோடு, தி.மு.கவிற்கு வாக்களித்த இந்துக்களை இழிவு படுத்துவதாகவும் உள்ளது என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.



Similar News