கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மாணவன் கொலை ! தி.மு.க இளைஞரணி நிர்வாகி கைது.!

கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மாணவன் கொலை ! தி.மு.க இளைஞரணி நிர்வாகி கைது.!

Update: 2019-10-10 06:28 GMT

திருச்சி ராஜிவ் காந்தி நகரில் வசிப்பவர் வீராசாமி. இவர் தனது வீட்டை வடமாநில பெண்ணிற்கு வாடகைக்கு விட்டுள்ளார்.அப்பகுதியின் தி.மு.க இளைஞரணி நிர்வாகி சுரேஷ் அடிக்கடி வடமாநில பெண்ணை சந்த்தித்துள்ளார். இருவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்தது வீட்டு ஓனர் வீரசாமிக்கு தெரிய வந்துள்ளது .


இதனையடுத்து வீட்டை உடனடியாக காலி பண்ணுமாறு வடமாநில பெண்ணிடம் கூறியுள்ளார் வீராசாமி. இதை சுரேஷிடம் தெரிவித்துள்ளார் அந்த பெண்.


இதனால் கடுப்படைந்த தி.மு.க நிர்வாகி சுரேஷ் தன் நண்பர்களை வீரசாமியின் வீட்டிற்கு கூட்டி சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் வீரசாமியின் மகன் கோபால் சாமியை மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்த வாகனங்கள் பொருட்களை நொறுக்கி விட்டு தலைமறைவாகினர்.


வீராசாமியின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை விரைவாக செயல்பட்டு தி.மு.க இளைஞரணி நிர்வாகி சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்!


இச்சம்பவத்தால் தி.மு.க வினரை கண்டு அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-cadre-arrested-in-murder-case-skd-214049.html


Similar News