உயிர் பலி வாங்க காத்திருக்கும் தி.மு.க பேனர் - ஸ்டாலின் அறிக்கை வெறும் கண்துடைப்பா.? வெளியான ஆதாரம்!

உயிர் பலி வாங்க காத்திருக்கும் தி.மு.க பேனர் - ஸ்டாலின் அறிக்கை வெறும் கண்துடைப்பா.? வெளியான ஆதாரம்!

Update: 2019-09-14 04:31 GMT

பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர்களை வைக்கக் கூடாது என்று கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ள நிலையிலும் திமுகவினர் இன்னும் பல இடங்களில் அபாயகரமான முறையில் பேனர் வைத்துள்ளனர்.


சென்னையில் பேனர் விழுந்த விபத்தில், இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளார்.


அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளதுடன், அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.


இருந்தாலும் இன்னும் பல இடங்களில் திமுகவினர் ஸ்டாலின் அறிக்கையை பொருட்பாடுத்தாது, சாலையில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்துள்ளனர்.


நேற்று எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் திமுக பேனர் சரிந்து, அருகில் சென்ற கேபிள் வயர் மீது சாய்ந்து நிற்கிறது. கேபிள் இல்லாமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிற்கும் என்ற நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுள்ளனர் திமுகவினர். இதற்கு ஸ்டாலின் உத்தரவு எல்லாம் வெறும் அறிக்கை அளவில் தானா, அதனை செயல்படுத்த மாட்டார்களா என்று பொதுமக்கள் புலம்பி வருவதை காண முடிகிறது.




Similar News