அரசியல்வாதியும் இல்லை ஆர்வலரும் இல்லை ஆனால் படுகொலை செய்யப்பட்டார் : சந்யாசிகளுக்கு வாழ உரிமை இல்லையா?
அரசியல்வாதியும் இல்லை ஆர்வலரும் இல்லை ஆனால் படுகொலை செய்யப்பட்டார் : சந்யாசிகளுக்கு வாழ உரிமை இல்லையா?
பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சிஷ்யரான சுவாமி தத்வபோதானந்தா அவர்கள், புதுச்சேரியில் உள்ள தனது குடியிருப்பில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நள்ளிரவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சுவாமி தத்வபோதானந்தாவுக்கு பிப்ரவரி 4, 1999 அன்று பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி சன்யாஸம் வழங்கினார்.
கொடூர கொலை
மாலைமலர் செய்திகளின் படி, ஸ்வாமி தத்வபோதானந்தா அவர்கள் புதுச்சேரியில் உள்ள மொட்டத்தோப்பு அண்ணாமலை நகரில் உள்ள கோகுலம் குடியிருப்பில் வசித்து வந்தார். 5 மாடி குடியிருப்பில் 13 வீடுகள் உள்ளன. ஸ்வாமி தத்வபோதானந்தா (60 வயது), இந்த குடியிருப்பில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு ஆறுமுகம் காவலராக வேலை செய்து கொண்டிருக்கிறார். ஆகஸ்ட் 28 ஆம் தேதி இரவு, அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குடியிருப்பிற்கு வந்தனர். அவர்கள் காவலரைத் தாக்கி, அங்கிருந்து ஓடிப்போகும் படி மிரட்டியுள்ளனர். பயந்துபோன காவலர், தனது கடமையைச் செய்யாமல் ஓடிவிட்டார்.
பின்னர் அந்த இளைஞர்கள் வாகன நிறுத்துமிடத்தில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தனர். வெளியே சென்றிருந்த பாதுகாப்பு காவலர் ஆறுமுகம் அதிகாலை 3 மணியளவில் அங்கு திரும்பி தனது பணியைத் தொடர்ந்தார்.
ஸ்வாமி தத்வபோதானந்தா தினமும் காலையில் சீக்கிரமே எழுந்திருப்பது வழக்கம். ஆனால் அவர் ஆகஸ்ட் 29, 2019 அன்று காலை 10 மணி வரை எழுந்திருக்கவில்லை. மேலும் அவருக்காக கொண்டு வரப்பட்ட பால் பாக்கெட் எடுக்கப்படாமல் இருந்தது. எனவே, சந்தேகத்தில் காவலர் ஆறுமுகம் கதவைத் தட்டினார். கதவு திறக்கப்படவில்லை.
இது குறித்து கோரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், திருமுகுகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கதவு பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் அதை உடைத்து உள்ளே சென்றார்கள். அவரது வீட்டின் இரண்டு அறைகளுக்கு இடையில் ஸ்வாமி தத்வபோதானந்தா கொலை செய்யப்பட்டு காணப்பட்டார். அவர் தலையிலும் உடலிலும் காயங்கள் இருந்தன. குடிபோதையில் இருந்த ரவுடிகள் ஸ்வாமிகளின் வீட்டிற்குள் நுழைந்து அவரைக் கொன்றுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.