சிதம்பரத்திற்கு இந்த சோதனை செய்யுங்கள் உண்மை வெளிவரும் - சுப்ரமணிய சுவாமி அதிரடி!
சிதம்பரத்திற்கு இந்த சோதனை செய்யுங்கள் உண்மை வெளிவரும் - சுப்ரமணிய சுவாமி அதிரடி!
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் காங்கிரஸ் முத்த தலைவர் ப.சிதம்பரத்தின் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்கைவிட்டால் அவருக்கு 'நார்கோ டெஸ்ட் ' (உண்மை கண்டறியும் சோதனை ) நடத்த வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் மேலும் 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் என்ன கேள்வி கேட்டாலும் அவர் ஆம் இல்லை என்ற என்ற ஒரு பதிலை மட்டுமே மாறி, மாறி கூறி வருகிறார். இதனால் சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கோர்ட்டில் சிபிஐ கூறியுள்ளது. இதனால் அவரது சிபிஐ காவல் மேலும் 5 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி ட்விட்டர்: சிபிஐ விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கைவிட்டால் அவருக்கு நார்கோ டெஸ்ட் எடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். என அவர் கூறியுள்ளார்.
உண்மை கண்டறியும் சோதனை என்றால் என்ன?
அதாவது Sodium Pentothal or Sodium Amytal என்ற மருந்தை ஊசி மூலம் ஒருவர் உடலில் செலுத்துவார்கள் அந்த மருந்து செலுத்தப்பட்ட நபர் உச்ச மயக்க நிலைக்கு செல்வார். அந்நேரத்தில் அவரிடம் கேட்கும் கேள்விக்கு அவரால் எந்தவொரு பொய்யும் சொல்ல மாட்டார். மேலும் அவருக்கு தெரிந்த விஷயத்தை அப்படியே வெளியே சொல்லி விடுவார். இது தான் 'நார்கோ டெஸ்ட் ' ஆகும். ஆக விசாரணை அதிகாரிகளுக்கு தேவையான விவரங்கள் கிடைத்து விடும்.