வேட்டையாடு விளையாடு 2 - கதாநாயகி யார் தெரியுமா?
வேட்டையாடு விளையாடு 2 - கதாநாயகி யார் தெரியுமா?;
2006ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கதில் கமல் - ஜோதிகா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வேட்டையாடு விளையாடு'. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் முயற்ச்சியில் கவுதம் மேனன் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே கமலுட ன் பேச்சுவார்த்தை நடைபெற்றதை பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கவிருப்பதாக கூறப்படும் இப்படத்தின் நாயகியாக அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுதம் மேனன் படத்தில் ஏற்கனவே அனுஷ்கா நடித்துள்ளதால் அவரும் நடிக்க ஒப்புகொள்வார் எனவே தெரிகிறது.