அயோத்தி மசூதி குறித்து பேச நீ யார் ? மீண்டும் ஒரு பாபர் வேண்டாம்! AIMIM தலைவர் ஒவைசிக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்!
அயோத்தி மசூதி குறித்து பேச நீ யார் ? மீண்டும் ஒரு பாபர் வேண்டாம்! AIMIM தலைவர் ஒவைசிக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்!
அயோத்தி ராமஜென்ம பூமி நில வழக்கில் நீண்ட காலம் கழித்து உச்ச நீதிமன்றம் தொல்லியல் துறையினரின் சான்றுகள் மற்றும் பல இஸ்லாமிய அமைப்புகளின் நல்லெண்ண விருப்பங்கள், இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றை பரிசீலித்து சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட அந்த நிலத்தை அரசிடம் வழங்கும் வகையில் சென்ற நவம்பர் 9- ந்தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. மேலும் வேறொரு இடத்தில் மசூதி கட்டிக் கொள்ள அரசு 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம் தரப்புக்கு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியது.
இந்த தீர்ப்பை தேசத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். குறிப்பாக அயோத்தியில் உள்ள முஸ்லிம்களும், பாபர் வம்சாவழி பேரன் கூட தீர்ப்பை ஏற்றுக் கொண்டதுமில்லாமல் ராமர் கோவில் கட்ட அனைத்து உதவிகளையும் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு அரசியல் செய்து வரும் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி தீர்ப்பு ஒருதலை பட்சமானது என்றும், 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை, எங்களுக்கு மசூதிதான் வேண்டும் என தொலைந்து போன பொம்மையை மீண்டும் மீண்டும் கேட்டு அடம் பிடிக்கும் குழந்தை போல பேசுவதும் அல்லாமல் இஸ்லாமிய இளைஞர்களிடையே பதற்றத்தை உருவாக்கும் வகையில் தினமும் பேசி வருகிறார்.
இந்த நிலையில் ராஷ்டிரிய முஸ்லீம் மன்ச் (ஆர்.எம்.எம்) இன் தேசிய செய்தித் தொடர்பாளர் யாசர் ஜிலானி தனது டுவிட்டரில் , ஒவைசியை எதிர்மறையுடன் இனவாத முரண்பாட்டை உருவாக்க முயற்சிக்கும் உண்மையான ‘பாபர்’ என்று அழைத்தார். மேலும் ஒவைசி இந்து விரோதம் மற்றும் அவமதிக்கும் நோக்கத்துடன் பேசி அயோத்தி பிரச்சினை தொடர்பாக நாட்டில் பதற்றத்தையும் குழப்பத்தையும் உருவாக்க முயலும் இந்த புதிய பாபர் வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.