ஊரடங்கின்போது வெளியே வருபவர்களை நூதன தண்டனை என்ற பெயரில் அசிங்கப்படுத்தாதீர்கள்.. போலீசாருக்கு டிஜிபி அறிவுறுத்தல்...

ஊரடங்கின்போது வெளியே வருபவர்களை நூதன தண்டனை என்ற பெயரில் அசிங்கப்படுத்தாதீர்கள்.. போலீசாருக்கு டிஜிபி அறிவுறுத்தல்...

Update: 2020-04-08 11:02 GMT

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று டிஜிபி அலுவலகத்தில் காவல்துறை உயரதிகாரிகளுடன் டி.ஜி.பி.திரிபாதி ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர் தவிர்க்கமுடியாத நிலையில் பொதுமக்கள் சிலர் வெளியே வருகின்றனர், அவர்களுக்கு இந்த நோயின் தீவிரத்தை எடுத்துக் கூறி வீட்டுக்கு திருப்பி அனுப்புங்கள், ஆனால் எவர் ஒருவரையும் நூதன தண்டனை என்கிற பெயரில் மரியாதை குறைவாக நடத்த வேண்டாம் என்றும், கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், விசாரணையின் போது இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக போலீசார் ஊரடங்கு நேரத்தில் வெளியே வரும் வாலிபர்களை முட்டி போடுதல், தோப்புக்க்கரணம் போட வைத்தல், க்ராவ்லிங் செய்ய வைத்தல், வாலிபர்களை நடுவில் நிற்கவைத்து சங்கு ஊதுதல், பறை அடித்தல் போன்ற நூதன முறைகளில் அவமானப்படுத்தும் தண்டனைகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த காட்சிகளை கேமிராக்களில் பிடித்து தொலைகாட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் பரவ விடுவதால் இது கண்ணியமான வழிமுறைகள் இல்லை என பொது சிந்தனையாளர்கள் சிலர் குற்றம் சாட்டி இருந்தனர்.  

Similar News