அருகில் வங்கி இல்லையா கவலை வேண்டாம்! தபால் நிலையங்களில் பணம் எடுக்கலாம் !

அருகில் வங்கி இல்லையா கவலை வேண்டாம்! தபால் நிலையங்களில் பணம் எடுக்கலாம் !

Update: 2019-09-10 03:57 GMT

நடுத்தர வர்க்கத்தினர் பல பேர் அருகில் இருக்கும் வங்கியில் வங்கி கணக்கு வைத்திருப்பார்கள்.அவர்கள் வீடு மாறும் போது பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர், குறிப்பாக வாங்கி சேவையில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர், இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அஞ்சல் நிலையங்களில் வங்கி திட்டம் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த வங்கி திட்டத்தில் மூலம் இந்தியாவில் ஓராண்டில் 1 கோடி தபால் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு சாதனை புரிந்துள்ளது, தமிழகத்தை பொறுத்தவரை 3 லட்சத்து 98 ஆயிரம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன.


கடந்த மாதம் வரை அஞ்சல் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே அஞ்சல் வங்கி சேவையை பெற்று வந்தனர்.இந்நிலையில் தற்போது இந்த வங்கி சேவையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. எந்த வங்கியிலும் கணக்கு வைத்திருப்பவர்கள் கூட அவரது வங்கிக்கணக்கு வாடிக்கையாளரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருந்தால் போதும் இனிமேல் தபால் வங்கிகளில் பணப் பரிவர்த்தனைகளை மவாங்கி சேவைகளை பயன்படுத்தலாம். தபால் நிலைய வங்கியில் பணம் எடுக்கலாம்.தபால் நிலைய வாங்கி என்பது தபால் நிலையங்கள் தான்.


இந்த வசதியை செப்டம்பர் 1 - தேதி அறிமுகப்படுத்தப்பட்டது . இந்த சேவையை மத்திய சட்டம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைசர் ரவிசங்கர்பிரசாத் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.


தபால் வங்கி சேவைத்தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்


‘தபால் வங்கி சேவையில் ஓராண்டில் இந்தியா முழுவதும் 1 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. எனவே அடுத்த ஓராண்டில் தபால் வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை 5 கோடியாக உயர்த்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் ’ என்றார்.


தபால் வங்கியின் ஓராண்டு நிறைவையொட்டி, தபால் வங்கி சேவையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு மத்தியஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விருதுகளை வழங்கி கௌரவித்தார் . இந்த விழாவில் தபால் ஊழியர்களின் சிறந்த செயல்பாட்டுக்காக விருதை (கோன் பனேகா பாகுபலி) தமிழகம் தட்டி சென்றது இதே போல் டிஜிட்டல் கிராமம் திட்டத்திற்காக 3-வது இடத்துக்கான விருதையும் தமிழகம் வென்றது.
தமிழக தலைமை தபால்துறை தலைவர் சம்பத் தலைமையிலான குழுவினர் தமிழகம் சார்பில் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.


Similar News