சென்னை குடிநீர் பஞ்சத்தை ஓட..ஓட விரட்டி அடித்து வரும் பருவமழை ! திருவள்ளூர் பகுதிகளில் 30 ஏரிகள் நிரம்பின.!

சென்னை குடிநீர் பஞ்சத்தை ஓட..ஓட விரட்டி அடித்து வரும் பருவமழை ! திருவள்ளூர் பகுதிகளில் 30 ஏரிகள் நிரம்பின.!

Update: 2019-10-30 09:31 GMT

தென்மேற்கு பருவமழையால் போதிய அளவு சென்னை மழை பெறாவிட்டாலும் நிலத்துக்குள் நல்ல ஈரக் கசிவையும், கிணறுகளில் ஓரளவு நீர் சுரப்பையும் அளித்தது. காலதாமதமில்லாமல் தொடர்ந்து வடகிழக்கு பருமழை பெய்யத் தொடங்கியதால் சென்னை மாநகரில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கிணறுகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் துவர் நீராக இருந்தாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த நீர் கிடைத்து வருகிறதே என்ற மகிழ்ச்சியில் மக்கள் உள்ளனர்.


இந்த நிலையில் தீபாவளி சமயத்தில் 3 நாள் விட்டுக் கொடுத்த மழை மீண்டும் தினமும் இரவு நேரத்தில் மக்களுக்கு தொல்லை அளிக்காமல் பெய்து வந்தது. இந்த நிலையில் குமரி கடலில் உருவான புயலின் தாக்கத்தால் கடந்த 2 நாட்களாக பகலிலும் பெய்து வருகிறது. சென்னையை விட சென்னை சுற்றுப்புற பகுதிகளில் மழை அளவு அதிகமாகவே உள்ளது.


ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதிகளில் 10 அடிக்கு கீழே கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து நிற்பதாக மக்கள் கூறுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதிலும் நல்ல மழை பெய்துள்ளது. மாநிலத்திலேயே திருத்தணியில் தென்மேற்கு பருவமழை நல்ல மழையை தந்தது. அதேபோல கடந்த 2 நாட்களில் மட்டும் இங்கு 15 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் 30 ஏரிகள் நிரம்பியதாகவும், மற்ற ஏரிகளுக்கு நீர் வரத்து பெருகியுள்ளதாகவும் வருவாய் துறை அதிகாரிகள் இன்று கூறியுள்ளனர்.


இதனால் சென்னையின் தண்ணீர் பஞ்சமும் வெகுவாகக் குறைந்து விட வாய்ப்பேற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.


மேலும், பார்வை மழைகாலம் இன்னும் ஒரு மாத அளவுக்கு இருப்பதால் இந்த ஆண்டு மழைப் பொழிவு மிக சிறப்பாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  


Similar News