ட்ரோன் கேமராவை கண்டதும் தெறிக்க ஓடும் புள்ளிங்கோ.!

ட்ரோன் கேமராவை கண்டதும் தெறிக்க ஓடும் புள்ளிங்கோ.!

Update: 2020-04-16 03:44 GMT

திருப்பூரில் 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தேவாரம் பாளையம் கிராமத்தில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதிக்கு சீல் வைத்து பொதுமக்கள் வெளியே வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ளதா என்று காவல்துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஊரில் அருகில் உள்ள பகுதியில் ஒரு மரத்தடி நிழலில் கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர், அதனைக் கண்ட போலீசார் ட்ரோன் கேமராவை அவர்களை நோக்கி செலுத்தினர் அப்போது ட்ரோன் கேமராவை கண்டதும் அந்த இளைஞர்கள் தெரித்து ஒடினர். அதில் ஒரு இளைஞர் கேரம் போர்டை எடுத்துச் செல்வதற்காக திரும்பவும் வந்துள்ளான், அவருக்கு நேரம் சரியில்லாததால் கேரம் போர்டு எடுத்துக் கொண்டு ஓடிய போது அந்த இளைஞரின் வேட்டி அவிந்து போனது, அதையும் பொருட்படுத்தாமல் அந்த இளைஞரின் தெறித்து ஓடினான்,

ஒரு கட்டத்தில் சோர்வடைந்த இளைஞன் அங்கேயே அமர்ந்து கொண்டு கேரம் போர்டை கொண்டு முகத்தை மூடிக்கொண்டார், ஆனாலும் டோன் கேமரா விடாததால், தப்பித்தால் போதும் டா சாமி என்று கேரம் போர்டு வீசிவிட்டு தெறித்து ஓடினான்,

இந்தக் காட்சிகளை திருப்பூர் காவல் துறையினர் விழிப்புணர்வுக்காக வடிவேலு காமெடிகள் உடன் இணைத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Similar News