டிக்கெட் கவுண்டரில் இனி நெடுநேரம் இருக்கத் தேவையில்லை..! வந்தாச்சு யூடிஎஸ் செயலி...

Update: 2024-04-26 10:54 GMT

டிக்கெட் கவுண்டரில் நெடுநேரம் காத்திருந்து பயணத்திற்கான முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்களை பெரும் நிலையை எளிதாக்க ரயில்வே நிர்வாகம் யூ டி எஸ் என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி மூலம் முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் ஆகியவற்றை பெற்றுக் கொள்ள முடியும். 

அதிலும் குறிப்பாக ஜியோ பென்சிங் என்ற கட்டுப்பாடுகள் இருந்திருந்தால் இந்த செயலி மூலம் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே இருந்து டிக்கெட் பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வந்தது, ஆனால் தற்பொழுது ரயில்வே நிர்வாகம் ஜியோ பென்சிங்கின் வெளிப்புற எல்லையை நீக்கி உள்ளது. 

அதனால் யூ டி எஸ் என்ற செயலி மூலம் ரயில் நிலையத்தில் இருந்து கொண்டும் வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் பயணத்திற்கான டிக்கெட் எடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்து விட வேண்டும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Source : The Hindu Tamil thisai 

Similar News