குடிபோதையில் தகாத வார்த்தைகளால் ஹோட்டலில் கலாட்டா செய்த விழுப்புரம் தி.மு.க நகர செயலாளர் ? : வைரலாகும் வீடியோ
குடிபோதையில் தகாத வார்த்தைகளால் ஹோட்டலில் கலாட்டா செய்த விழுப்புரம் தி.மு.க நகர செயலாளர் ? : வைரலாகும் வீடியோ
விழுப்புரம் தி.மு.க நகர செயலாளராக இருந்து வருகிறார் சக்கரை. இவர் விழுப்புரத்தில் உள்ள ஆனந்தாஸ் ஹோட்டலில் குடி போதையில் தகாத வார்த்தைகளை பேசி கலாட்டா செய்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த காணொளியை பலரும் ட்விட்டரிலும் வாட்சப்பிலும் பகிர்ந்து வருகின்றனர்.
இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் ஐ.டி ஊழியரை கடத்தி, மிரட்டி, பணம் பறித்த தி.மு.க பிரமுகர் உள்பட 3 பேர் சேர்ந்த கும்பல் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது விழுப்புரத்தில் இந்த ஆட்டூழியம் அரங்கேறியுள்ளது. எதிர்க்கட்சியான தி.மு.க-வினரின் தொடர் அராஜகங்களை கண்டு தமிழர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.