அறிவிப்பை வெளியிட்டது உலக வங்கி : எளிதில் தொழில்துவங்க உகந்த நாடுகள் பட்டியலில் மின்னல் வேக வளர்ச்சி கண்ட இந்தியா.!
அறிவிப்பை வெளியிட்டது உலக வங்கி : எளிதில் தொழில்துவங்க உகந்த நாடுகள் பட்டியலில் மின்னல் வேக வளர்ச்சி கண்ட இந்தியா.!
உலகில் எளிதாக தொழில் துவங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் 20 சீர்திருத்த நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதற்கான அறிவிப்பை வருகின்ற அக்டோபர் 24-ஆம் தேதி உலக வங்கி வெளியிட உள்ளது.
மொத்த தரவரிசையை கணக்கில் கொள்ளாமல், தொழில் துவங்குவதற்கு ஏற்ற சீர்திருந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இத்தகைய வளர்ச்சி கண்டுள்ளது. மே 2019 முன்னர் தொடர்ந்து 12 மாதங்கள் பல்வேறு தர நிலையின் அடிப்படையில் நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன. அதில் இந்தியா முதல் 20 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு இதே போல வெளியான மொத்த தரவரிசை பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தைப் பிடித்தது. பிரதமர் மோடி ஆட்சியமைத்த பின் எல்லா வருடமும் இந்தியா இதில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. கடந்த 2016-ம் வருடம் 153-வது இடத்தில் இருந்தது. அதற்கு முந்தைய வருடம் 165-வது இடத்தில் இருந்தது. இப்படி வரிசையாக இந்தியா உலகில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் முன்னேற்றம் கண்டு வருகிறது.
உலக வங்கி பல அடிப்படை விஷயங்களை வைத்து இதை தீர்மானிக்கிறது. ஒரு தொழில் தொடங்க எப்படி சூழல் உள்ளது, இதற்கு முன் தொடங்கியவர்கள் எப்படி இருக்கிறார்கள், கட்டுமான துறை எப்படி உள்ளது, மின்சார வசதி, கடன் வசதி, வரி எப்படி வாங்குகிறார்கள், எல்லை தாண்டிய வர்த்தக அனுமதி எப்படி உள்ளது, ஒப்பந்தம் எப்படி நடக்கிறது என்று பல விஷயங்களை மையமாக வைத்து நாடுகளை தரம்பிரிக்கிறது. இந்தப் பட்டியலில் முதல் 50 நாடுகளில் இந்தியா இடம் பிடிக்க வேண்டும் என்பது மத்திய பாரதிய ஜனதா அரசின் கனவாக அமைந்துள்ளது.