முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே ஓட்டு! ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் அறிமுகம்!
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே ஓட்டு! ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் அறிமுகம்!
சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அப்போது தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ‘‘ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. வரும் நவம்பர் 30 ந்தேதி தேர்தல் தொடங்கி டிசம்பர் 20 அன்று முடிந்து, டிசம்பர் 23 ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்” என்றார் .
மேலும் “நாட்டிலேயே முதல் முறையாக ஜார்க்கண்ட் தேர்தலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வாக்கு அளிக்கும் முறைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...’’ என்றார்.
தேர்தல் ஆணையத்தின் புதிய அணுகுமுறையால், வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளான கிட்டத்தட்ட 30 சதவீதம் வாக்காளர்களுக்கு சிரமங்கள் குறையும் என கூறப்படுகிறது.
என்றாலும் முதன் முதலாக இது சோதனை அடிப்படையில் நடத்தப்படுகிறது என்றாலும் இதில் உள்ள சில சாதக பாதக அம்சங்களைக் கணக்கில் கொண்டு எதிர்காலத்தில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பாதுகாப்புத் தன்மையுடன் வருங்காலத்தில் இது போன்ற அணுகுமுறையில் தேர்தல் நடத்த இந்த தேர்தல் முறை வழி வகுக்கும் என கூறப்படுகிறது.