சிட்லப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி - செயலற்ற மின்சார வாரிய அதிகாரிகளால் உயிர் பலிகள் தொடருமா???
சிட்லப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி - செயலற்ற மின்சார வாரிய அதிகாரிகளால் உயிர் பலிகள் தொடருமா???
சிட்லபாக்கம் பேரூராட்சி தாம்பரம் நகராட்சிக்கும் பல்லவபுரம் நகராட்சிக்கும் இடையில் அமைந்த பகுதியாகும். இந்த பேரூராட்சி மக்கள் தண்ணீர் பிரச்சனை, குப்பை அகற்றாத பிரச்சனை , வெள்ளநீர் கால்வாய் அமைப்பதிலும் தொடர் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தனர்., மேலும் சில தினங்களுக்கு முன் 25 கோடி செலவில் ஏரி தூர்வாருவதில் நடுக்கும் பிரச்னையும் எம்.எல்.ஏ வின் அலட்சிய பேச்சையும் கதிர் நியூஸ் வெளியிட்டது .
சிட்லபாக்கம் மக்கள் மனதில் அச்சத்தை விளைவிக்கும் விதமாக திங்களன்று மேலும் ஒரு துயரமான சம்பவம் சிட்லப்பாக்கத்தில் நடந்தது. திங்கள்(16-09-2019) அன்று இரவு 8.30 மணியளவில் சொந்தமான லோடு வேனில் டிரைவராக உள்ள திரு. சேதுராஜ் பணிமுடித்து வீடு திரும்பியவர் 9.00 மணியளவில் உணவருந்திவிட்டு பின்னர் தன செல்லமான தெரு நாய் குட்டிகளுக்கு வீட்டு அருகில் உள்ள காலிமனையில் உணவை வைக்க
முயன்றார். அப்பொழுது தீப்பொறிகளுடன் அவர் தெருவில் உள்ள மின்கம்பம் பலத்த சத்தத்துடன் உடைந்து விழுந்தது, அதில் உள்ள மின்கம்பி சேதுராஜனின் கையில் பட்டது. இந்த நிகழ்வால் மின்சாரம் தாக்கி வீசப்பட்ட அவர் காயமுற்றார் .
பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துமனைக்கு அவரை அழைத்து சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவரை அரசு மருத்துமனைக்கு பரிந்துரை செய்தனர். 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்ததில் தனியார் மருத்துவமனைக்கு வர மறுத்தது. ஆகவே வேறு ஒரு வாகனத்தில் அவர் கிரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பரிதாபம் அவர் உயிர் பிரிந்தது. இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.