ட்விட்டரில் ப்ளூ டிக் கணக்கிற்கு மாதம் 660 கட்டணம் - எதிர்காலத்தில் உயர வாய்ப்புள்ளதா?
ட்விட்டரில் ப்ளூ டிக் கணக்கிற்கு மாதம் ரூபாய் 660 கட்டணமாக செலுத்த வேண்டும்.
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமாக ட்விட்டர் கோடிக்கணக்கானோரால் தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ட்விட்டரில் பெற அதிகாரப்பூர்வமான கணக்கு என்பதை குறிப்பிடும் வகையில் ப்ளூ டிக் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமாத்துறை, பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி வருகிறார்கள்.
இது மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அதிகாரம் பூர்வமான கணக்கை உருவாக்க முடியும் என்பது தான் அதன் அர்த்தம். இந்நிலையில் ட்விட்டரை வாங்கியுள்ள உலக பணக்காரர் எலன் மஸ்க் தற்போது அதிரடியான பல்வேறு முயற்சிகளை ட்விட்டரில் செய்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம் வசூலிக்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாக இருந்தது. தற்போது அதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
இது குறித்த அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் பயனாளர்களின் உண்மை அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு இனி மாதம் 8 அமெரிக்க டாலர் சுமார் 660 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றவாறு மாறும். அவ்வாறு கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெரும் பயனாளர்களுக்கு பதில்கள், குறிப்புகள் மற்றும் தேடல்கள் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டும் இருக்கும் வசதியும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: News