வீடு கட்டுமானப் பணிகளை முடிக்க ரூ.20,000 கோடி அவசர ஒதுக்கீடு!! ரியல் எஸ்டேட் துறையினர் மகிழ்ச்சி !

வீடு கட்டுமானப் பணிகளை முடிக்க ரூ.20,000 கோடி அவசர ஒதுக்கீடு!! ரியல் எஸ்டேட் துறையினர் மகிழ்ச்சி !

Update: 2019-09-15 04:58 GMT

நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், ஏற்றுமதித் துறை, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் சார்ந்து மேலும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.


‘‘அப்போது அவர், முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள துறைகளுக்கான ஏற்றுமதி கடன் உயர்த்தப்பட்டுள்ளது. அதற் கென்று கூடுதலாக ரூ.36,000 கோடி வழங்கப்படும். ஏற்றுமதியை ஊக்கு விக்கும்விதமாக மொத்தமாக ரூ.50 ஆயிரம் கோடி அளவில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.


ரியல் எஸ்டேட் துறையையும் ஊக்கு விக்கும் விதமாக சில திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். தற் போதைய சூழலினால் பாதியில் விடப்பட்ட கட்டுமானங்களை, குறிப்பாக வாங்கத்தக்க அளவிலான வீட்டுக் கட்டுமானத் திட்டங்களை தொடர்வதற்காக கடன் உதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி அளவில் நிதி அளிக்கப்பட உள்ளது. அரசு சார்பாக ரூ.10 ஆயிரம் கோடியும், பொதுத் துறை நிறுவனங்கள் வழியாக ரூ.10 ஆயிரம் கோடியும் வழங்கப்படும். அரசுப் பணியாளர்கள் வீடுகள் வாங்கத்தக்க வகையில் வெளி வணிக கடன் விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


வங்கியின் கடன் செயல்பாடுகள் தொடர்பாக வரும் செப்.19 அன்று பொதுத்துறை வங்கித் தலைவர் களுடன் ஆலோசனை நடத்த இருப்ப தாகவும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பால் சுணக்க நிலையில் இருந்த ரியல் எஸ்டேட் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Similar News