இங்கிலாந்திலும் சமூக இடைவெளி கடை பிடிப்பதில் 'அதே' பிரச்சினை : உள்துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை

இங்கிலாந்திலும் சமூக இடைவெளி கடை பிடிப்பதில் 'அதே' பிரச்சினை : உள்துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை;

Update: 2020-04-12 04:28 GMT

பிரிட்டனில் நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸால் 917 பேர் பலியாகி உள்ளனர். இதைதொடர்ந்து பலியானவர்கள் எண்ணிக்கை 9,875 ஆனது. மேலும் அந்த நாட்டு பிரதமரே கொரோனாவின் பிடியில் சிக்கி மரணத்தின் வாயிலை மிதித்துவிட்டு திரும்பியுள்ளதால் அந்த நாடே பீதியில் உறைந்துள்ளது.

இந்த நிலையில் கொடூரமான இந்த நிலையில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் பிரிட்டன் மக்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் அரசின் தங்குமிட வழிகாட்டுதலை பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால் சிறுபான்மையினர் மட்டும் வழிகாட்டுதல் எதையும் பின்பற்றாமல் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் போலீசாரின் அதிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என்று மூத்த இந்திய வம்சாவளி கேபினட் அமைச்சர் பிரீத்தி பட்டேல் எச்சரித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Similar News