சீன அதிபர் வந்து செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு! போக்குவரத்து தடைகளை பொறுத்துக் கொள்ளுமாறு பொது மக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!!

சீன அதிபர் வந்து செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு! போக்குவரத்து தடைகளை பொறுத்துக் கொள்ளுமாறு பொது மக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!!

Update: 2019-10-11 05:27 GMT

இன்று இந்தியா – சீனா இடையே உள்ள சில முக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி.ஜின்பிங் இடையே மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் முக்கியப் பேச்சுவார்த்தை நடை பெறவுள்ளது. சீனாவின் பாரம்பரியத்துடன் தொடர்புடைய வரலாற்று சிறப்புமிக்க இந்திய நகரம் மாமல்லபுரம் என்பதால் இந்த இடத்தை தேர்ந்தெடுப்பதில் சீனாவும் சம்மதம் வழங்கியது.


இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று பிற்பகல் 2.10 à®®à®£à®¿à®•à¯à®•à¯ சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் கிண்டியில் உள்ள ஓட்டலுக்கு செல்கிறார். பின்னர் ஓட்டலில் இருந்து மாலை 4 à®®à®£à®¿à®¯à®³à®µà®¿à®²à¯ மாமல்லபுரத்துக்கு காரில் செல்கிறார். பின்னர் மீண்டும் மாமல்லபுரத்தில் இருந்து காரில் ஓட்டலுக்கு வருகிறார். மறுநாள் மீண்டும் காரில் கோவளம் சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, à®•à®¿à®£à¯à®Ÿà®¿à®•à¯à®•à¯ காரிலேயே திரும்புகிறார். பின்னர் அங்கிருந்து காரிலேயே விமான நிலையத்துக்கு சென்று சீனா புறப்படுகிறார்.


சென்னை மாநகர வீதிகளில் சீன அதிபர் அதிக நேரம் பயணம் செய்வதால் அண்ணா சாலை, à®ªà®´à¯ˆà®¯ மகாபலிபுரம் சாலை (ராஜீவ் காந்தி சாலை), à®•à®¿à®´à®•à¯à®•à¯ கடற்கரை சாலை, à®œà®¿à®Žà®¸à¯à®Ÿà®¿ சாலைகளில் சீன அதிகாரிகள் ஆலோசனையின்படி சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சீன அதிபர் சாலை வழியாக செல்லும் நேரத்தில் அந்த பகுதியை சுற்றிலும் போக்குவரத்து முழுவதுமாக சில நேரத்துக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் சென்னை நகரத்தில் மேற்கண்ட இடங்களில் வெள்ளி கிழமை மதியம் 12 à®®à®£à®¿à®¯à®¿à®²à¯ இருந்தே பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.


இதனால் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, à®®à¯à®Ÿà®¿à®¨à¯à®¤à®µà®°à¯ˆ இந்த பகுதிகளில் உள்ள சாலைகளை பயன்படுத் தாமல் தவிர்ப்பது நல்லது. போக்கு வரத்து நெருக்கடியில் சிக்கினால் அதை ஏற்றுக்கொள்ளும் வகை யில் தயார் நிலையில் இருக்க போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Similar News