மராட்டிய முதல்வரான பா.ஜ.க பட்னவிஸ், துணை முதல்வரான தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பதவி ஏற்பு - "சோனமுத்தா போச்சா" போல டீலில் விடப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கும் சிவ சேனை!
மராட்டிய முதல்வரான பா.ஜ.க பட்னவிஸ், துணை முதல்வரான தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பதவி ஏற்பு - "சோனமுத்தா போச்சா" போல டீலில் விடப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கும் சிவ சேனை!
எதிர்பாராத திருப்பமாக மகாராஷ்டிர முதல்வராக பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னவிஸ் இரண்டாவது முறையாக பதவியேற்றார். துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்றார். இவர், 2009 முதல் 2014-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவி வகித்தவர் ஆவார்.
கடந்த மாதம் நடைபெற்ற மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க தனிபெரும்பான்மை கட்சியாக 105 இடங்களையும், சிவ சேனா கட்சி 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களையும் கைப்பற்றின.
பா.ஜ.க - சிவ சேனா கூட்டணியில் போட்டியிட்டு பெரும்பான்மை பெற்று இருந்தாலும், சிவ சேனா முதல்வர் பதவி தங்களுக்கு தான் வேண்டும் என குழந்தைத்தனமாக அடம்பிடித்ததால் பா.ஜ.க அரசு அமைப்பதில் இருந்து பின்வாங்கியது.
சிவ சேனா முதல்வராக வேண்டும் என்ற வெறியுடன் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால், அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக, பா.ஜ.க கட்சியின் தேவேந்திர பட்னவிஸ் அவர்ளும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாரும் மும்பையில் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றனர்.
இதன் மூலம், பா.ஜ.க - தேசியவாத காங்கிரஸ் புதிய கூட்டணி உருவாகியுள்ளது. முதல்வர் கனவில் மிதந்துக்கிடந்த சிவ சேனை மண்ணை கவ்வி காமெடி பீசானது.