இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது இந்திய அரசே! சீனா என போலி செய்தியை வெளியிட்டு, மூக்குடைக்கப்பட்டு பின்வாங்கிய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்! #FakeNewsToI

இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது இந்திய அரசே! சீனா என போலி செய்தியை வெளியிட்டு, மூக்குடைக்கப்பட்டு பின்வாங்கிய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்! #FakeNewsToI

Update: 2019-10-11 07:00 GMT

இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது இந்திய அரசாங்கம் என்பது அனைவரும் அறிந்தது. எந்த நாடு சந்திப்பை நடத்துகிறதோ அந்நாடு தான் சந்திப்பின் இடத்தை முடிவு செய்யும் என்பது அடிப்படை விஷயம் அறிந்தவர்களால் புரிந்துக் கொள்ள முடியும். ஆனால், மத்திய மோடி அரசுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் சில ஊடகங்களும், ஊடகவியலாளர்கள் இது குறித்து வதந்தியை பரப்பி, இந்த சந்திப்பின் தாக்கத்தை கொச்சைப்படுத்த முனைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஜெயா மேனன் என்ற பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரையில் மாமல்லபுரத்தை தேர்வு செய்தது சீனா தான் என எழுதவே, தற்போது அந்த செய்தி குறிப்பை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் திரும்பப் பெற்று அந்த செய்தி போலி செய்திதான் என ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.




https://twitter.com/im_saiganesh/status/1182522306544852993?s=20


மேலும், இச்செய்தியை உறுதிபடுத்த ஜெயா மேனனால் அந்த கட்டுரையில் எந்த தரவுகளையும், குறிப்புகளையும் குறிப்பிட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, வந்த போக்கில் ஒரு போலி செய்தியை பரப்பலாம் என இவர்கள் திட்டம் தீட்டியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.




https://twitter.com/SuryahSG/status/1182519405936144386?s=20


இந்த போலி செய்தியை அடிப்படையாக வைத்து மத்திய மோடி அரசு மாமல்லபுரத்தை இந்த சந்திப்பிற்காக தேர்வு செய்யவில்லை என்று கம்பு சுத்தி வந்த போராளிகள் வாயடைத்து போயுள்ளனர்.


Similar News