விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திலும் கையெழுத்திட மாட்டோம் என பிரதமர் மோடி எடுத்த தைரியமான முடிவு பாராட்டுக்குரியது - தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் செல்லமுத்து !
விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திலும் கையெழுத்திட மாட்டோம் என பிரதமர் மோடி எடுத்த தைரியமான முடிவு பாராட்டுக்குரியது - தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் செல்லமுத்து !
ஆசியா கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளுடன், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளும் பங்கேற்கும் ஆசிய மண்டல பொருளாதார கூட்டு மாநாடு பாங்காக்கில் நடைபெற்றது. அதில் 16 நாடுகளும் இணைந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தின,மேலும் இந்த ஒப்பந்தம் காந்திய சிந்தனைகளுக்கு எதிரானது என்று கூறிய மோடி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட தனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்
முன்னதாக, இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மலிவான விவசாய உற்பத்திப் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் இந்திய சந்தையில் குவிந்து, உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என விவசாயிகளும், வணிகர்களும் அச்சம் தெரிவித்திருந்தனர்,ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததற்காக நன்றி தெரிவிப்பதாக தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் செல்லமுத்து கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உள்நாட்டு உற்பத்தி சந்தையில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் இதில் கையெழுத்திடக் கூடாது என விவசாய சங்கம் கோரிக்கை விடுத்த நிலையில், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திலும் கையெழுத்திட மாட்டோம் என பிரதமர் மோடி தைரியமான முடிவு எடுத்ததற்கு பாராட்டு தெரிவித்தார்