கோவையில் பிடிபட்ட பயங்கரவாதி பாரூக் கவுசீர்?

கோவையில் பிடிபட்ட பயங்கரவாதி பாரூக் கவுசீர்?

Update: 2019-09-15 06:41 GMT

கோயம்பத்தூரில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவு துறை எச்சரித்திருந்தது இதனால் கோவை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. இந்நிலையில்


கோயம்புத்தூரில் தங்க நகைப் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தவன் பாருக் கெளசீர். இவன் வங்கதேசத்தைச் சேர்ந்தவன் , தனது செல்போனை சர்வீஸ் செய்ய கடையில் கொடுத்துள்ளான் . அவனது செல்போனை சர்விஸ் செய்யும் போது, பாகிஸ்தான் முஜாகிதீன் என்ற வாட்ஸ் ஆப் க்ரூப்பில் துப்பாக்கி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பல தகவல்கள் பரிமாறி கொண்டுள்ளனர், இதை கண்ட கடை உரிமையாளர் கோவை காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.


இதனை தொடர்ந்து பாருக் கெளசீரைப் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். செல்போனை ஆராய்ந்த போது, துப்பாக்கிகள் குறித்து கூகுளில் தேடிப் பார்த்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.


பாகிஸ்தான் முஜாகிதீன் என்ற வாட்ஸ் ஆப் குழு அட்மினை காவல் துறை தேடி வருகின்றது, இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோவை காவல் துறை , பாருக் கெளசீரிடம், ரேசன் அட்டை மற்றும் ஆதார் அட்டை இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தியக் குடிமகனுக்கான ஆவணம் கிடைத்தது எப்படி என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar News