ஆகஸ்ட் 12-ஆம் தேதி சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!!
ஆகஸ்ட் 12-ஆம் தேதி சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, அந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
சிவகார்த்திகேயன் நடிக்கும் 16வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது
இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனுஇமானுவேல் நடித்து வருகிறார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், நட்டி நட்ராஜ், ஆர்கே சுரேஷ், அர்ச்சனா, பாரதிராஜா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் சூரி ஆகிய இருவரும் இணைந்து காமெடி கேரக்டர்களில் நடிக்கின்றனர் மிகவும் எதிர்பார்த்து கூறிய இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.