முதலாம் ஆண்டு நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி - அமித்ஷா மரியாதை!!

முதலாம் ஆண்டு நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி - அமித்ஷா மரியாதை!!

Update: 2019-08-16 06:03 GMT
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

நினைவஞ்சலி நிகழ்ச்சியில் வாஜ்பாயின் மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யா மற்றும் பேத்தி நிகாரிகா ஆகியோரும் பங்கேற்றனர்.
இதேபோல் பாஜக அலுவலகங்களில் வாஜ்பாயின் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது.

மூன்று முறை நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்த அவருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ”அடல்ஜியின் சிந்தனைகளும், வார்த்தைகளும் எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கும். இந்தியாவின் வளர்சியில் அவரது பங்களிப்பை நாம் நினைவில் கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1162210023184801792

Similar News