ரவுடிகள் வைத்து மிரட்டி மதமாற்றத்தில் ஈடுபடும் பாதிரியார்கள்: போலீசார் விசாரணை!

ரவுடிகள் மூலமாக மக்களை மிரட்டி மதமாற்றத்தில் ஏழை மக்களை ஈடுபடுத்தும் பாதிரியார்கள் மீது விசாரணை.

Update: 2022-11-18 03:12 GMT

கர்நாடகாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினராக சிக்காலிகர் உள்ளனர். இந்த பிரிவை சேர்ந்த ஒரு தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. கணவரை கிறித்துவ மதத்திற்கு மாறும்படி மனைவி கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதற்கு ஒப்புக்கொள்ளாத கணவர் தன்னுடைய மத தலைவரிடம் சென்று, இது பற்றி கூறியிருக்கிறார். இது எடுத்து அந்த வகுப்பு தலைவர் போலீஸ் நிலையம் சென்று தங்கள் மதத்தை சேர்ந்த நபர்களை கிறிஸ்தவ அமைப்பினர் கட்டாயமாக மாற்றம் செய்கிறார்கள் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.


இவர்கள் அறிவித்த புகாரின் பெயரில் தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக புகார் அளித்த சம்பத் என்பவர் கூறுகையில், சில மத போதகர்கள் எங்கள் உறவினர் வீட்டிற்கு வந்து ஜெப கூடத்தில் பங்கிருக்கும் படி கட்டாயப்படுத்தி உள்ளார் என்று குறிப்பிட்டார். மேலும் இக்காலியர் வகுப்பு குறி வைத்து கிறிஸ்துவ அமைப்புகள் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறது. குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கி வகுப்பினர் என்பதால் எங்களை குறி வைக்கிறார்கள்.


இப்படி மதமாற்றம் செய்ய மறுப்பவர்கள் மீது உள்ளூர் ரவுடிகளை கொண்டு மிரட்டியும் மதமாற்றத்தில் ஈடுபட வைத்துள்ளார்கள். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. போலீஸ் மேற்கொண்டுள்ள தீவிர விசாரணையின் பெயரில் தற்பொழுது மதமாற்றத்தில் ஈடுபடும் பாதிரியார்கள் மற்றும் சில ரவுடிகள் உட்பட 15 பெயர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் அவர்களிடம் தீவிரவு சாரணை நடைபெற்று வருகிறது.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News