கட்டிலில் கிடந்த ஆபாச நடிகரின் படத்தை, காஷ்மீரில் தாக்கப்பட்டதாக பதிவிட்ட பாகிஸ்தான் முன்னாள் தூதர் - உலக அரங்கில் சந்தி சிரித்த பாகிஸ்தான் அரசின் அறிவிலித்தனம்.!

கட்டிலில் கிடந்த ஆபாச நடிகரின் படத்தை, காஷ்மீரில் தாக்கப்பட்டதாக பதிவிட்ட பாகிஸ்தான் முன்னாள் தூதர் - உலக அரங்கில் சந்தி சிரித்த பாகிஸ்தான் அரசின் அறிவிலித்தனம்.!

Update: 2019-09-03 07:29 GMT

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து வந்த விதி 370 நீக்கப்பட்டதற்கு, காஷ்மீர் மக்கள் வினையாற்றினார்களோ இல்லையோ பாகிஸ்தான் வானத்துக்கும், பூமிக்கும் குதிப்பதை காண முடிகிறது. இவ்வளவு காலம் தீவிரவாத முயற்சிகள் மேற்கொண்டு காஷ்மீர் மாநிலத்தை தன்வசப்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டு வந்தது. தற்போது அதற்கு வழி இல்லாமல் போனதால், காஷ்மீர் மக்களுக்கு குரல் கொடுப்பது போல பாவனை செய்து வருகின்றது.


ஒரு பக்கம் இந்தியாவில் சட்டப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்னொரு பக்கம் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அடிப்படை அறிவு கூட இல்லாமல் செயல்படுவதை காணும் போது வேடிக்கையாக உள்ளது.


சமீபத்தில் பாகிஸ்தான் செனட்டர் ரகுமான் மாலிக், ட்விட்டரில் ஐக்கிய நாடுகள் சபையை குறிப்பிட்டு பேசுவதற்கு பதிலாக UNO என்ற விளையாட்டின் அதிகாரபூர்வ பக்கத்தை குறிப்பிட்டு, காஷ்மீர் விவகாரம் குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் பேசியிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகி வரும் நிலையில் அடுத்த உச்சகட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.


ஆபாச நடிகர் ஜான் சின் மருத்துவமனையில் இருப்பது போன்ற ஒரு காட்சியில், ஒரு பெண் அவரை அனைத்துக்கொண்டு அழுகிறார். இந்த காட்சி ட்விட்டரில் பதிவிடப்பட்டு, "காஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் இவரது கண்கள் பறிபோய்விட்டது. உங்கள் ஒரு லைக் ஒரு பிரார்த்தனைக்கு சமம் என்று பதிவிடப்பட்டிருந்தது. இதனை பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித் ரீ-ட்விட் செய்துள்ளார். ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபைக்கு  (UN) பதிலாக UNO விளையாட்டை டேக் செய்த சம்பவத்தின் சர்ச்சை அடங்காத நிலையில், ஆபாச நடிகர் கட்டிலில் இருக்கும் காட்சியை, காஷ்மீரோடு தொடர்புபடுத்தி காண்பித்துள்ளது பாகிஸ்தான் அரசின் நிலையை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.


இப்படி பல போலி வீடியோக்கள் பாகிஸ்தான் தரப்பில் இருந்து பரவவிடப்பட்டு, இந்தியாவில் பிரிவினை ஏற்படுத்த முயற்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.




https://twitter.com/nailainayat/status/1168482555642953729




https://twitter.com/Jainendra_Joshi/status/1168492449620119558




https://twitter.com/pks7272/status/1168490129742131200




https://twitter.com/paulSayPKMKB/status/1168483372584144898

Similar News