விமான நிலையங்களில் பார்க்கிங்கில் இருந்து விமானம் ஏறும் வரை பயணிகளுக்கு துணையாக கனிவுடன் சேவை!! ஏர் இந்தியா தொடங்குகிறது!!
விமான நிலையங்களில் பார்க்கிங்கில் இருந்து விமானம் ஏறும் வரை பயணிகளுக்கு துணையாக கனிவுடன் சேவை!! ஏர் இந்தியா தொடங்குகிறது!!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சந்திப்பு மற்றும் வாழ்த்து((Meet and Greet)) என்ற திட்டத்துக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்தது.
அதன்படி நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அதன் மூலம் பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் கூடுதல் சேவைகளை வழங்க முடியும். அந்த வகையில் ஏர் இந்திய விமானத்தில் உயர் வகுப்பில் பயணம் செய்வோர் கூட இனி பார்க்கிங்கில் இருந்து விமானம் ஏறும் வரை அனைத்து நடைமுறைகளுக்கும் வழிகாட்டியாக துணை ஒருவரை உடன் அழைத்து செல்லலாம்.
முதற்கட்டமான டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் அனைத்து வகை பயணிகளுக்கும் இந்த சேவை வழங்கப்படவுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுதிறனாளிகள், சிறப்பு கவனம் தேவைப்படும் பயணிகளுக்கு ஏர் இந்தியா தொடர்ந்து இலவச சேவையை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் வேறுசில தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த சேவைகளுக்கு கட்டணமும் வசூலிக்க அனுமதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினார்.