சென்னையில் 2,600 இடங்களில் விநாயகர் சிலைகள் : சதுர்த்தியை முன்னிட்டு களை கட்டத் தொடங்கியது சென்னை !!

சென்னையில் 2,600 இடங்களில் விநாயகர் சிலைகள் : சதுர்த்தியை முன்னிட்டு களை கட்டத் தொடங்கியது சென்னை !!

Update: 2019-09-01 00:45 GMT


சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2600 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் 5000 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கடை வீதிகளில் மற்றும் காய்கனி சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடியுள்ளதால் போக்கு வரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது.


நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னனி மற்றம் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் சென்னையில் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த சிலைகள் நிறுவும் இடங்களை முன்கூட்டியே தெரிவித்து அதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட துறைகளிடம் பெறவேண்டும் என காவல் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.


இதன்படி சென்னை முழுவதும் 2600 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் இதற்கான தடையில்லா சான்றுகளை மின் வாரியம், காவல் துறை, நெடுஞ்சாலை துறை, தீயணைப்பு துறை, மாநகராட்சி மற்றும் மாநகராட்சி இல்லாத இடங்களில் பிற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றிடம் இருந்து பெறவேண்டும். இவ்வாறு தடையில்லா சான்றுகள் பெறப்பட்ட பிறகு விநாயகர் சிலைகள் நிறுவப்படும். இந்த சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.


வரும் சனிக்கிழமை முதல் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து செல்வார்கள். இந்த ஊர்வலங்கள் செல்லும் பாதைகளை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும் தடை செய்யப்பட்ட தெருக்கள் வழியாக ஊர்வலம் செல்லக்கூடாது என்றும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. சிலைகளை கரைப்பதற்காக மெரினா கடற்கரை பட்டினம் பாக்கம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பிரத்தியேக இடங்களில் ஒதுக்கப்படும்.


இந்த நிகழ்வீன் போது அசம்பாவிதம் ஏற்படுவதை தடுப்பதற்காக 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் சிலைகளை நிறுவும் இடங்களில் பேனர்கள், ஒலிப்பெருக்கிகள் அமைக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தாமல் சிலைகளை அமைக்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.


சென்னையில் இப்போதில் இருந்தே வெளியூருகளில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்படுகிறன்றன. சிலைகளை நிறுவும் இடத்தில் பந்தல் மற்றும் தோரணங்கள் அமைக்கப்படுகின்றன. வீடுகளில் வழிபடுவதற்காக களிமண்ணால் செய்யப்படும் சிலைகளை தயாரிக்கும் பணி இப்போதே துவங்கி விட்டது. கடைவீதிகளில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் பொருட்களை வாங்க அதிக அளவில் கடை வீதிகளில் மற்றும் காய்கனி அங்காடிகளில் கூடியுள்ளதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.


Similar News