கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து வைத்த திருமா வளர்ப்புகள் - காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதன் பின்னணி..?
கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து வைத்த திருமா வளர்ப்புகள் - காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதன் பின்னணி..?
இந்து மதத்தை இழிவாக பேசிய திருமாவளவனுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறி வந்த காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், இந்துக்களை பற்றி இழிவாக பேசினார். அதற்கு பிறகு நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. என்னைப் பின்பற்றும் மக்களில் சுமார் 80% சதவீதம் பேர் இந்துக்கள் தான் என்று கூறி சமாளித்தார்.
இதுகுறித்து பா.ஜ.க ஆதரவாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், "லைட்டா க்ளிசரின் போடலாமே சார்..நடிப்பு பத்தல என்றும் தனது மற்றொரு பதிவில், எல்லா இந்துக்களும் இவரை எங்கு கண்டாலும் செருப்பால் அடியுங்கள் என்று குறிப்பிட்டும் பதிவிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக திருமாவளவன் தரப்பு மிரட்டலுக்கு பயப்படாமல், தனது கருத்துகளை பதிவு செய்து வந்தார் காயத்ரி ரகுராம். இந்த நிலையில் 3 லட்சத்திற்கும் மேல் ஃபாலோயர்களை கொண்டிருந்த நடிகை காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நேரடியாக அவரை எதிர்கொள்ள துணிவில்லாமல் ஒட்டுமொத்தமாக ரிப்போர்ட் அடித்து முடக்கியுள்ளனர் திருமாவளவன் ஆதரவாளர்கள்.