பிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகள் ஏலத்திற்கு வந்தது, கிடைக்கும் நிதியை கங்கை நதியின் தூய்மைக்காக செலவு செய்ய திட்டம்

பிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகள் ஏலத்திற்கு வந்தது, கிடைக்கும் நிதியை கங்கை நதியின் தூய்மைக்காக செலவு செய்ய திட்டம்

Update: 2019-09-14 09:06 GMT

பிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகள் ஏலத்திற்கு வருகிறது. ஏலத்தில் கிடைக்கும் நிதியை நமாமி கங்கே திட்டத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இது குறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த ஒரு வருடமாக எனக்கு அளிக்கப்பட்ட அன்பளிப்புகள் ஏலத்திற்கு வருகிறது. இதில் கிடைக்கப்படும் நிதியை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்தவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/narendramodi/status/1172759282187681792?s=19


இன்று துவங்கி அக்டோபர் 3 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஏலத்தில் ஆன்லைன் மூலமாகவும் பங்குபெறலாம். https://www.pmmementos.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஏலத்தில் பங்குபெற்று, பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள் மற்றும் அன்பளிப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.


Similar News