GoBackModi ட்வீட்களில் 59% ட்வீட்டுகள் அமெரிக்கா இங்கிலாந்திலிருந்தும், 15% ட்வீட்டுகள் அரபு நாடுகளில் இருந்தும் பதியப்பட்டுள்ளது அம்பலம்! வெறும் 22% ட்வீட்டுகள் தான் இந்தியாவில் இருந்து போடப்பட்டதாம்!

GoBackModi ட்வீட்களில் 59% ட்வீட்டுகள் அமெரிக்கா இங்கிலாந்திலிருந்தும், 15% ட்வீட்டுகள் அரபு நாடுகளில் இருந்தும் பதியப்பட்டுள்ளது அம்பலம்! வெறும் 22% ட்வீட்டுகள் தான் இந்தியாவில் இருந்து போடப்பட்டதாம்!

Update: 2019-10-11 07:19 GMT

பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா முழுக்க இருந்து GoBackModi என்ற ஹேஷ்டேகில் ட்வீட்டுகளை பதிந்து பிரதமரின் புகழுக்கும் களங்கம் விளைவிக்க முயல்வது வழக்கம். இது எந்த எதிர் தாக்கத்தையும் ஏற்படுத்தாததால், பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளில் இருந்து இந்த ஹேஷ்டேக்கில் ட்வீட்டுகளை பதிய வேண்டுகோள் விடுத்து வந்தனர்.


இந்நிலையில் இன்றும் பிரதமரின் தமிழக வருகையை ஒட்டி GoBackModi ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. ஆனால் அதில் விசேஷம் என்னவென்றால் இந்த ட்ரெண்டில் பதியப்பட்ட 59% ட்வீட்டுகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இருந்தும், 15% ட்வீட்டுகள் அரபு நாடுகளில் இருந்து பதியப்பட்டது என்றும், வெறும் 22% ட்வீட்டுகள் மட்டுமே இந்தியாவில் இருந்து பதியப்பட்டது என்பதும் அம்பலமாகியுள்ளது. இந்த 22% ட்வீட்களிலும் தமிழகத்தில் இருந்து பதியப்பட்ட ட்வீட்டுகள் மிகவும் சொற்பம் என்று சொல்லப்படுகிறது.


இத்தகவல்களை பா.ஜ.க தமிழக சமூக ஊடகப்பிரிவு தலைவர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் கணக்கில் பதிந்துள்ளார்.




https://twitter.com/CTR_Nirmalkumar/status/1182563926568882177

Similar News