கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேறும் என முதல்வர் இபிஎஸ் கூறினார். சேலம் மேட்டூர் அணையை பாசனத்திற்காக திறந்து வைத்த முதல்வர் மேலும் பேசுகையில்:
விவசாயிகள் மீது அக்கறை கொண்டது தமிழக அரசு. விவசாயிகளுக்கான உரம் கையிருப்பு போதுமானதாக உள்ளது. இன்றைய மேட்டூர் அணை 20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் நீர் திறப்பு அதிகரிக்கப்படும். மேட்டூர் , கொள்ளிடம் இடையே 3 தடுப்பணைகள் கட்டப்படும்.
கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் மத்திய அரசின் உதவியுடன் அதிமுக அரசால் நிறைவேற்றப்படும். இதன் மூலம் தமிழகத்திற்கு 125 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். சேலம் தலைவாசல் பகுதியில் ஆயிரம் கோடி செலவில் கால்நடைப்பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.