முதன் முதலாக காஷ்மீர் செல்கிறது சிறுபான்மை விவகார அமைச்சகம் சார்பிலான வளர்ச்சிக் குழு!
முதன் முதலாக காஷ்மீர் செல்கிறது சிறுபான்மை விவகார அமைச்சகம் சார்பிலான வளர்ச்சிக் குழு!
மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களை எங்கெங்கு நடைமுறைப்படுத்தலாம் என்பதை அறிவதற்காக சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் சார்பிலான குழு வரும் 27, 28-ம் தேதிகளில் காஷ்மீர் செல்கிறது என்று மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தும் பகுதிகளை அடையாளம் காண்பதற்காக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில் ஒரு குழுவினர் வரும் 27,28-ம் தேதி காஷ்மீர் செல்லகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, 370 பிரிவை திரும்பப் பெற்றது ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் அரசியல்ரீதியாக தவறான நினைத்து விமர்சிக்கிறார்கள். ஆனால், நாங்கள் செயல்படுத்தும் திட்டங்களால் ஏற்படும் தாக்கத்தைப் பார்த்து அவர்களாகவே வந்து ஆதரிப்பார்கள்.
சிறுபான்மை விவாகரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், செயலாளர் ஆகியோர் இந்த பயணத்தில் உடன் செல்கிறார்கள். காஷ்மீரில் பள்ளிகள்,கல்லூரிகள், திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் எங்க அமைக்கலாம் ஆகியவற்றை அடையாளம் காண்பார்கள். சமூக மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த அனைத்து சாதமான அம்சங்களையும் நோக்குவார்கள்.
பிரிவினைவாதிகள் கைகளில் சிக்கி மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என்பதற்காகவே, ஜம்மு காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எந்த விதமான தவறான தகவல்களும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதற்காக ஒரு பொறுப்பான அரசின் பணியாகும்.
எங்கள் குழு முதலில் காஷ்மீர் மட்டும் செல்கிறது, லடாக், ஜம்முவுக்கு பின்னர் செல்வார்கள் அதற்கான தேதி அறிவிக்கப்படும்.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த அரசியலமைப்பு 370 பிரிவை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை, இது பிரதமர் மோடியின் அரசு.