சர்வதேச திரைப்பட விழாவில் 'கோல்டன் ஐகான்' என்ற சிறப்பு விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது!
சர்வதேச திரைப்பட விழாவில் 'கோல்டன் ஐகான்' என்ற சிறப்பு விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது!
கோவாவில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது விழாவை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ,கோவா முதலமைச்சர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
ஒன்பது நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் இந்த விழாவில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன,விழாவின் நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாதுறையில் சிறப்பாக சேவையாற்றியதற்காக மத்திய அரசு அவருக்கு நடிகர் ரஜினிகாந்திற்கு ‛கோல்டன் ஐகான்'என்கிற பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது,நடிகர் அமிதாப் பச்சன் இதை வழங்கினார்.
விருதை பெற்ற பிறகு பேசிய ரஜினி இந்த விருதை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. இதை அளித்த இந்திய அரசிற்கு நன்றி. என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்றார், விழாவில் ரஜினியை பாராட்டிப் பேசிய அமிதாபச்சன் ரஜினி ஒரு எளிய மனிதர் என்றும்நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆலோசனை பரிமாறிக் கொள்வோம் என்றார் பிறகு கீழ்மட்டத்தில் இருந்து உயர்ந்து,ஒரு ஓரு நாளும் நமக்கு ஊக்கம் அளிக்கிறார் என்று பாராட்டினர்.