பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம்! கவர்னர் வழங்கியுள்ளார் !
பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம்! கவர்னர் வழங்கியுள்ளார் !
மகாராஷ்டிராவில் பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும்,
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் சரத் பவாரின் மருமகனுமான அஜித்
பவார் துணை முதல்வராகவும் நேற்று முன்தினம் (23.11.2019) பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதனை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய
கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் உடனடியாக பட்னாவிஸ் அரசு,
பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நேற்று
தள்ளிவைத்தனர். பின்னர் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வபந்தது.
அப்போது மகாராஷ்டிரா பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல்
ரோகத்கி, “மகாராஷ்டிராவில் பெரும்பான்மையுடன் தேவேந்திர பட்னாவிஸ் அரசு
அமைந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 14 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.
எனவே அந்த அவகாசத்தை குறைத்து கோர்ட்டு உத்தரவிடக் கூடாது” என்றார்.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் நாளை காலை 10 30 மணிக்கு தீர்ப்பு
வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.